Friday 3rd of May 2024 08:46:04 AM GMT

LANGUAGE - TAMIL
விளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

விளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!


தமிழில் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்த மகாநதி படம் விருதையும் வாங்கி தந்து விட்டது.

கதையில் கவனம் செலுத்தும் அதேநேரத்தில் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வருகிறது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான கனா படம் பெரிய வெற்றிப்படமானது.

இதேபோல் ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படமும் பாக்சிங் கதைதான். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு கதைதான். இதேபோல் வெண்ணிலா கபடிக்குழு உட்பட பல படங்கள் விளையாட்டு வீரர்கள் பற்றி எடுக்கப்பட்ட படங்கள்தான்.

இந்த வரிசையில் தற்போது கீர்த்தி சுரேசும் புதிய படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். இதில் ஆதி ஹீரோவாக நடிக்கிறார். நாகேஷ் கூகுனூர் இயக்குகிறார். இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக கீர்த்தி சுரேஷ் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு தன் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி உள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் கேரக்டருக்காக மேக்கப்பே இல்லாமல் கீர்த்திசுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE